விபத்தால் வெடித்த டேங்கர் லாரி : 18 பேர் உயிரிழப்பு, 189 பேர் காயம்..!

விபத்தால் வெடித்த டேங்கர் லாரி : 18 பேர் உயிரிழப்பு, 189 பேர் காயம்..!
விபத்தால் வெடித்த டேங்கர் லாரி : 18 பேர் உயிரிழப்பு, 189 பேர் காயம்..!

எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து வெடித்ததால் 18 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் ஷென்யாங்-ஹாய்கு விரைவு நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று எரிவாயு ஏற்றிக்கொண்டு சென்றது. அந்த லாரி ஷாங்காயில் உள்ள ஷிஜியாங் பகுதியில் செல்லும்போது எதிர்பாராத விதமாக தடுமாறி, அங்கிருந்த தொழிற்சாலையில் விழுந்தது.

அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த லாரி வெடித்துள்ளது. அதுமட்டுமின்றி லாரியில் இருந்த எரிவாயு டேங்கரும் வெடித்து அந்த தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்துள்ளது. அதன் அருகே இருந்த கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 189 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது 6 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்தை பார்த்த அருகாமையில் இருந்த பெண் ஒருவர், டேங்கர் வெடித்தபோது தனது வீட்டின் ஜன்னல் உடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் வீட்டிலிருந்த தனக்கும், தனது தாய் மற்றும் சகோதரருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com