தொடரும் மாரடைப்பு மரணங்கள்.. பேட்மிண்டன் விளையாண்ட 17 வயது சீன வீரர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!

17 வயதான பேட்மிண்டன் வீரர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
video image
video imagex page

நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள்கூட மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக, மாரடைப்பு காரணமாக 16 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், இந்தோனேஷியாவில் சீன நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பு
மாரடைப்புfacebook

இந்தோனேசியாவின் யோக்யாகர்த்தா நகரில் சர்வதேச பேட்மிண்டன் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 30ஆம் தேதி நடைபெற்ற போட்டியின்போது சீனாவின் 17 வயதான ஜாங் ஜிஜி ஜப்பானின் கசுமா கவானோவை எதிர்கொண்டு விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்கோர் 11-11 என இருந்தபோது திடீரென சீன வீரர் ஜாங் ஜிஜி சுருண்டு விழுந்தார். சற்று நேரம் என்ன நடக்கிறது என அறியாமல் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில், பயிற்சியாளர்கள் ஜாங் ஜிஜியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் பதவி வழங்கப்படாதது ஏன்?.. பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

video image
தொடரும் மாரடைப்பு மரணங்கள்: கிரிக்கெட் விளையாடியபோது உயிரிழந்த மும்பை வீரர்! #ViralVideo

இதையடுத்து ஆம்புலன்ஸ் உடனடியாக வரவழைக்கப்பட்டு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மாரடைப்பு ஏற்பட்டு ஜாங் ஜிஜி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜாங் ஜிஜியின் உயிரை காக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போது எதுவும் பலன் அளிக்காமல் போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் திறமைமிக்க வீரராக ஜாங் ஜிஜி இருந்ததாகவும், நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டியவர் இளம் வயதில் உயிரிழந்தது வருத்தமும் அதிர்ச்சியும் அளிப்பதாக சீன விளையாட்டு அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஜாங் ஜிஜி மறைவுக்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே மைதானத்தில் சீன பேட்மிண்டன் வீரர் ஜாங் ஜிஜி சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிக்க: ”என் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்” - சபாநாயகரிடம் வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான் பெண் எம்.பி! #Video

video image
தொடரும் மாரடைப்பு மரணங்கள்: கிரிக்கெட் விளையாடியபோது உயிரிழந்த டெல்லி பொறியாளர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com