\
எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 121 பேர் படுகாயம்; 17 பேர் மாயம்

எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 121 பேர் படுகாயம்; 17 பேர் மாயம்

எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 121 பேர் படுகாயம்; 17 பேர் மாயம்
Published on

கியூபாவில் எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 120 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கனமழை காரணமாக, மடான்சாஸ் நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீது மின்னல் பாய்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தீ, மளமளவென எண்ணெய் கிடங்கு முழுவதும் பரவியது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கரும்புகை ஏற்பட்டதால், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த 17 தீயணைப்பு துறை வீரர்களை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 120 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்பட்டுள்ள கிடங்கின் அருகே இருந்த 800க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com