\
சவுதியில் கொரோனாவுக்கு 17 இந்தியர்கள் மரணம்?

சவுதியில் கொரோனாவுக்கு 17 இந்தியர்கள் மரணம்?

சவுதியில் கொரோனாவுக்கு 17 இந்தியர்கள் மரணம்?
Published on

சவுதி அரேபியாவில் 17 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிப்புகள் அதிகரித்து வரும் இந்த சூழலில் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்கள் நலனை கூர்ந்து கவனித்து வருவதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் உரிய சூழல் ஏற்படும் போது, சவுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தூதரகம் கூறியுள்ளது.

சவுதி அரேபியாவில் கொரோனாவுக்கு 160க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com