தோண்ட தோண்ட குறையாத தங்கம்.. 300 ஆண்டுகளுக்கு முன்பே நடந்த ராக்கி பாய் கதை..!

தோண்ட தோண்ட குறையாத தங்கம்.. 300 ஆண்டுகளுக்கு முன்பே நடந்த ராக்கி பாய் கதை..!
தோண்ட தோண்ட குறையாத தங்கம்.. 300 ஆண்டுகளுக்கு முன்பே நடந்த ராக்கி பாய் கதை..!

300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயின், பிரிட்டனுக்கு இடையே நடந்த போரில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டெடுக்கப்பட்டதோடு அதில் இருந்து பில்லியன் டாலர் கணக்கிலான தங்க, வெள்ளி நாணயங்கள், ஆடம்பர பொருட்களும் இருந்தது தெரிய வந்திருக்கிறது.

1701-14 வரை பிரிட்டனுடன் ஸ்பானிஷ் நாட்டு போர் நடைபெற்றது. இந்த போரின் முக்கிய அங்கமாக 1708ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி கொலம்பியாவுக்கு அருகே உள்ள கடலில் ஸ்பானிஷ் பிரிட்டன் இடையே நடந்த போரில் ஸ்பானிஷின் சான் ஜோஸ் என்ற கப்பல் மீது பிரிட்டிஷ் கடுமையான தாக்குதலை நடத்தியது.

இதனால் 64 துப்பாக்கிகள், ஆபரணங்களை சுமந்துச் சென்ற ஸ்பானிஷின் சான் ஜோஸ் கப்பல் மீது பிரிட்டிஷ் வீசிய குண்டால் தீ பற்றி எரிந்து கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இந்த போரினால் சான் ஜோஸில் பயணித்த சுமார் 600க்கும் மேற்பட்டோரின் கதையும் முடிந்தது.

கப்பல் மூழ்கி 300 ஆண்டுகளுக்கும் மேல் ஆனாலும் அதனை தேடும் பணியை பிரிட்டிஷ், கொலம்பியா (போர் நடந்த கடற்பகுதி) , ஸ்பெயினும் கைவிட்டபாடில்லை. அந்த கப்பலை தேடி சென்றவர்கள் பாலியானதுதான் மிச்சமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு சான் ஜோஸ் கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூவாயிரம் அடி ஆழ கடலுக்கு அடியில் இருந்து தங்கம், வெள்ளி, வைரம் என அள்ள அள்ள நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட உபகரணங்களை கடலுக்கு அடியில் இறக்கி அதன் மூலம் கொலம்பிய அரசாங்கம் பெற்றுள்ளது. சான் ஜோஸ் கப்பல் இருந்த கடற்பரப்பில் ஒரு பீரங்கியைக் காணலாம். இது தவிர, பல்வேறு களிமண் பானைகள் உள்ளிட்ட பிற கலைப்பொருட்களும் மணலில் சிதறிக் கிடந்திருக்கிறது.

இது தொடர்பாக கடலுக்கடியில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோவில் அள்ள அள்ள குறையாத வகையில் தங்கம், வெள்ளி மற்றும் பல ஆபரண கற்களும், நாணயங்களும் இருந்தது தெரிய வந்திருக்கிறது.

அதில் 11 மில்லியனுக்கு தங்கம் மட்டுமே இருக்கிறதாம். இதுபோக எமரால்டு கற்கள் என பற்பல ஆபரணங்களும் அதில் காணக்கிடக்கின்றவாம். 2015ம் ஆண்டே சான் ஜோஸ் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் உள்ள பொருட்களின் மதிப்பு ஆராய்ச்சியாளர்களையே வாய்ப்பிளக்க வைத்திருக்கிறதாம்.

இதனிடையே சான் ஜோஸில் இருக்கும் பொருட்களை அடைய கொலம்பியா, ஸ்பெயின் இடையே போட்டா போட்டியும் நடப்பதாகவும் தகவல் வெளியாகியிக்கிறது.

தற்போது இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதோடு, நெட்டிசன்ஸ் இடையே யாஷின் கே.ஜி.எஃப் 2 படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளோடு ஒப்பிடப்பட்டு பேசுபொருளாகியுள்ளது.

அதில், ராக்கி பாய் கடைசியில் தன்னிடம் இருந்த விலைமதிப்பற்ற தங்கத்தோடும், ஆயுதங்களோடும் தனிக் கப்பலில் சர்வதேச எல்லையில் சென்ற போது ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பார். அப்போது ராக்கி பாயிடம் இருந்த அனைத்து தங்கக்கட்டிகளும் அவரோடு சேர்ந்து கடலில் மூழ்கியிருக்கும். 

வெறும் திரைப்படமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நன்றாக பதிந்திருந்த ராக்கி பாயின் கதை போலவே 300 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்பானிஷின் சான் ஜோஸ் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வு இருப்பதாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com