30 சதுர அடி அறையில் அடைத்து வைக்கப்பட்ட 164 நாய்கள்..!

30 சதுர அடி அறையில் அடைத்து வைக்கப்பட்ட 164 நாய்கள்..!
30 சதுர அடி அறையில் அடைத்து வைக்கப்பட்ட 164 நாய்கள்..!

ஜப்பானில் சிறிய வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 164 நாய்களை பார்த்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த நாய்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. மிக மோசமான குற்றங்களில் விலங்குகளை சித்ரவதை செய்து பதுக்கி வைப்பதும் ஒன்று என விலங்குகள் உரிமை ஆர்வலரும், டோபுட்சுகிகின் விலங்குகள் உரிமை குழுவின் தலைவருமான குனிஹிசா சகாமி கூறியுள்ளார்.

இசுமோ என்ற நகரத்தில் சரியான உணவு கிடைக்காமல் நலிந்த நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட நாய்களை ஒருவர் சிறிய வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக அந்த வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் புகார் கொடுத்திருக்கின்றனர். சகாமியின் குழு அங்கு சென்று பார்த்தபோது இடிபாடுகளுக்கு நடுவில் செல்ஃப், டேபிள் மற்றும் நாற்காலிகளுக்கு அடியில் நாய்கள் படுத்திருந்ததை பார்த்திருக்கின்றனர்.

வெறும் 30 சதுர மீட்டரில் (323 சதுர அடி) அமைந்திருந்த அந்த வீட்டில் தரை முழுவதும் நாய்கள் படுத்திருந்ததாகவும், அந்த இடம் தவிர மற்ற இடங்களில் நாய் மலங்கள் சுத்தம் செய்யப்படாமல் அப்படியே இருந்ததகாவும் சகாமி தெரிவித்துள்ளார்.

மேலும் ’’நாய்களின் சத்தம் தாங்கமுடியவில்லை என பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த வீட்டை 7 வருடங்களுக்கு முன்பே சோதனையிட சென்றிருக்கின்றனர். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. தற்போது அந்த வீட்டில் மூன்று பேர் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களால் தற்போது நாய்களை பராமரிக்க முடியவில்லை. எனவே அவர்கள் நாய்கள் வேறு பராமரிப்பு வீடுகளுக்கு அனுப்பிவிட ஒப்புக்கொண்டுள்ளனர். மீட்கப்பட்ட 164 நாய்களும் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளன’’ என சகாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com