உலகம்
பாகிஸ்தான்: எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான்: எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில், கராச்சி - ராவல்பிண்டி இடையே தேஜ்காம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்றும் வழக்கம் போல இயக்கப்பட்டது. இன்று அதிகாலை லியாகத்ப்பூர் அருகே வந்தபோது, ஒரு பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ, அடுத்தடுத்தப் பெட்டிகளுக்கும் பரவியது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் 16 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.