பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஆர்டிக் காப்பாற்றப்படுமா?

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஆர்டிக் காப்பாற்றப்படுமா?
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஆர்டிக் காப்பாற்றப்படுமா?

கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆர்டிக் பகுதிகளையும் பாதிப்பதாக தனியார் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசுபட்டு வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்த ஸ்லாவியா என்ற அமைப்பின் அறிக்கை, வடதுருவத்திலிருந்து 1000 மைல்கள் தொலைவில், பிளாஸ்டிக் துகள்கள் பனிப்பாறைகளுடன் மிதந்து கொண்டிருக்கின்றன எனத் தெரிவிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஆர்டிக் பகுதிகளையும் இனி காப்பாற்ற முடியாது என்று தோன்றுவதாகவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

மேலும் அந்த அமைப்பு கடலில் இருந்து பிளாஸ்டிக், துருப்பிடித்த இரும்புகள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை தனித்தனியாக பிரித்தெடுத்து லாரிகளில் ஏற்றும் பணியை மேற்கொண்டது. ரஷ்யாவின் மர்மென்ஸ்க் நகரின் வளைகுடாவிலிருந்து சுமார் 15 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த பணியில் அந்த நகரைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், ஐநா அமைப்பினரும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த பணி முழுவதையும் வீடியோவாக எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com