நைஜீரியாமுகநூல்
உலகம்
நைஜீரியா: வெடித்த பெட்ரோல் டேங்க்... 147 பேர் உயிரிழப்பு... தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்!
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 147ஆக உயர்ந்துள்ளது.
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 147ஆக உயர்ந்துள்ளது.
நைஜீரியாவின் தென் மேற்கில் உள்ள ஜிகாவா மாகாணத்தில் உள்ள மஜியாவில், எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி ஒன்று சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. உடனே அப்பகுதியில் இருந்த ஏராளமானவர்கள், லாரியில் இருந்த கசிந்த எரிபொருளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென டேங்கர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 147 பேர் உயிரிழந்தனர். சுமார் நூறு பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சரக்கு ரயில் போக்குவரத்து நைஜீரியாவில் தோல்வியடைந்ததால் சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் அங்கு விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. தொடரும் விபத்துகளால், அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸுக்கு அதிகரிக்கும் ஆதரவு? கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?