குவாசி, எலான் மஸ்க்
குவாசி, எலான் மஸ்க்twitter page

இப்படியொரு திறமையா! அசந்து போன எலன் மஸ்க்.. 14 வயது சிறுவனுக்கு SpaceX நிறுவனத்தில் கிடைத்த வேலை

தன்னுடைய நிறுவனத்தில், எலான் மஸ்க் 14 வயது சிறுவனுக்கு பணி வழங்கியிருப்பது பலரையும் ஆச்சர்யமடையச் செய்துள்ளது.
Published on

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களை நடத்தி வரும் இவர், ட்விட்டர் சமூக வலைத்தளத்தையும் வாங்கி, அதில் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் 14 வயது சிறுவன் ஒருவருக்கு எலான் மஸ்க் வேலை வழங்கி அசத்தியிருப்பது எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர் கைரான் குவாசி. 14 வயது சிறுவனான குவாசி, தன்னுடைய 11வது வயதில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிக்கத் தொடங்கினார். தற்போது சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பட்டம் பெற உள்ளார்.

இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்ற குவாசிக்கு, அந்நிறுவனம் மிக முக்கிய வேலை ஒன்றை வழங்க உள்ளது. எலான் மஸ்க் நிறுவனங்களில் பணிக்குச் சேர வேண்டுமெனில், கடுமையான இன்டர்வியூவ்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சிறுவனான குவாசி, எலான் மஸ்கின் மனதையே தொட்டிருப்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கைரான் குவாசி தனது சமூக வலைதள பக்கத்தில், ” ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் சேரவும், ஸ்டார்லிங்க் குழுவில் பணியாற்றவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சிறந்த நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸில் என்னுடைய வயதை பொருட்படுத்தாமல் திறமையை ஆய்வு செய்து பணியில் சேர்த்துள்ளது எனக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் CEO எலோன் மஸ்க் எனக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற கையோடு தனது தாயுடன் வாஷிங்டனுக்குச் சென்று பணியாற்ற உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ”குவாசி எங்களது நிறுவனத்தில் விண்வெளியை ஆராய்வதற்காகவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகவும் பணி அமர்த்தப்பட்டுள்ளார். அவர் மனித குலத்தை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற அவர் பங்களிப்பார் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

இளம்வயதில் இருந்தே படிப்பில் கைரான் குவாசி திறன் கொண்டவராக இருந்ததாகவும், 10 வயதிலேயே அவர் Intel Labs நிறுவனத்தில் பயிற்சி ஊழியராக இணைந்து ஏஐ குறித்து ஆய்வு செய்துள்ளதாகவும் அவர்கள் பெற்றோர் தெரிவித்துள்ளனர். சிறு வயதிலேயே எலான் மஸ்க் நிறுவனத்தில் குவாசி இணைந்திருப்பதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com