இலங்கையில் தனியார் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தனியார் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தனியார் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு
Published on

இலங்கையில் தனியார் பேருந்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயமுற்றனர்.

இலங்கையில் லுணுகலை என்ற இடத்திலிருந்து இன்று காலை பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. பதுளை மாவட்டம் பசறை என்ற இடத்தில் 13ஆம் கட்டை பகுதியில் அந்தப் பேருந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் 14 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 46 பேர் படுகாயமுற்றனர்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாய் நிதி உடனடியாக வழங்க, ஊவா மாகாண ஆளுநர் மற்றும் பிரதமச் செயலாளர் ஆகியோருடன், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

விபத்து குறித்து விசாரணை அறிக்கை அளிக்க, ஊவா மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com