ஜார்ஜியா: அட்லாண்டா உயிரியல் பூங்காவில் 13 கொரில்லாக்களுக்கு கொரோனா

ஜார்ஜியா: அட்லாண்டா உயிரியல் பூங்காவில் 13 கொரில்லாக்களுக்கு கொரோனா
ஜார்ஜியா: அட்லாண்டா உயிரியல் பூங்காவில் 13 கொரில்லாக்களுக்கு கொரோனா

ஜார்ஜியாவிலுள்ள அட்லாண்டா உயிரியல் பூங்காவிலுள்ள 13 கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மிருகக்காட்சி சாலைகளில் வாழும் கொரில்லாக்களிலேயே மிகவும் வயதான 60 வயது ஓஸ்ஸியும் அடக்கம்.

வெள்ளிக்கிழமை கொரில்லாக்களுக்கு இருமல், சளி மற்றும் செரிமானமின்மை போன்ற பிரச்னைகள் இருந்ததை உயிரியல் பூங்கா உரிமையாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே கொரில்லாக்களின் சளி மாதிரிகளை ஜாரிஜியா பல்கலைக்கழகத்திலுள்ள கால்நடை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த மாதிரிகளை தேசிய கால்நடை ஆய்வகத்திற்கு மேல்பரிசோதனைக்காக அனுப்பியிருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனால் உயிரியல் பூங்காவில் 4 குழுக்களாக வாழும் 20 கொரில்லாக்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

மேலும், கொரோனா அறிகுறியற்ற ஊழியர் யாரோ ஒருவரிடமிருந்துதான் கொரில்லாக்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கவேண்டும் எனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதேசமயம் கொரில்லாக்கள் பார்வையாளர்களிடமிருந்து தொலைவில் இருப்பதால அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவித்திருக்கிறது.

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று உயிரியல் பூங்காவின் இயக்குநர் டாக்டர் சாம் ரிவேரா தெரிவித்திருக்கிறார். மேலும் கொரில்லாக்கள் கூட்டமாக வாழ்வதால் தொற்று ஏற்படுகிறது. இது முதல்முறையல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com