\
பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ்முகநூல்

பிலிப்பைன்ஸ் | வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 126 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 126 பேர் உயிரிழந்துள்ளனர்.
Published on

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 126 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடமேற்கு பகுதியில் ட்ராமி புயல் தாக்கிய நிலையில், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே சேற்றில் புதைந்த பலரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட இடங்களை அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் நேரில் ஆய்வு செய்து, மக்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பிலிப்பைன்ஸ்
”நேரடி அட்டாக்!” களமிறங்கிய இஸ்ரேல்.. வெடித்து சிதறும் ஏவுகணைகள்.. என்ன செய்யப் போகிறது ஈரான்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com