\
நியூயார்க் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 12 பேர் பலி

நியூயார்க் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 12 பேர் பலி

நியூயார்க் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 12 பேர் பலி
Published on

நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தனர். 

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ வேகமாக பரவியதும் பீதியடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அலறியடித்தபடி ஓடி வந்தனர். இதைத்தொடர்ந்து சுமார் 160க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து நியூயார்க் நகர காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஐந்து அடுக்கு கொண்ட அந்தக் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் தீப் பிடித்தது. 20 வீடுகள் கொண்ட இந்த அடுக்குமாடி கட்டடம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தீவிபத்து சம்பவத்தால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com