பிரிட்டன் பாராளுமன்றத்தில் 12 இந்தியர்கள்

பிரிட்டன் பாராளுமன்றத்தில் 12 இந்தியர்கள்

பிரிட்டன் பாராளுமன்றத்தில் 12 இந்தியர்கள்
Published on

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் நேற்று முன் தினம் நடந்தது. மொத்தமுள்ள 650 இடங்களில் 649 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 316 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைக் காட்டிலும் 12 இடங்கள் குறைவாகும். எதிர்க்கட்சியாக இருக்கும் தொழிலாளர் கட்சிக்கு 261 இடங்கள் கிடைத்திருக்கின்றன. ஸ்காட்லாந்தில் இருந்து இயங்கும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். லிபரல் டெமாக்ரட் கட்சி 12 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த தேர்தலில் 12 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழர்.

பிரிஸ்டால் வெஸ்ட் தொகுதியில் லேபர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழக வம்சாவளியைச் சேர்ந்த தங்கம் ரச்செல் டெபோனர் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com