படகு கவிழ்ந்து 10 சிறுவர்கள் உட்பட 12 ரோஹிங்கியர்கள் பலி

படகு கவிழ்ந்து 10 சிறுவர்கள் உட்பட 12 ரோஹிங்கியர்கள் பலி

படகு கவிழ்ந்து 10 சிறுவர்கள் உட்பட 12 ரோஹிங்கியர்கள் பலி
Published on

வங்கதேசம்-மியான்மர் எல்லையில் உள்ள நஃப் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 சிறுவர்கள் உட்பட 12 ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர்.

மியான்மர் நாட்டின் ராகைன் மாகாணத்தில் நடைபெற்று வரும் வன்முறை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் வங்கதேசம் மற்றும் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். மிகவும் அபாயகரமான எல்லைப்பகுதிகளை கடந்து அவர்கள் புலம்பெயர்கிறார்கள்.

இந்த நிலையில், மியான்மர் எல்லையில் உள்ள நஃப் ஆற்றில் படகு மூலம் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் சிலர் வங்கதேசம் நாட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக அவர்களது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. நூற்றுக்கும் அதிகமானோர் பயணம் செய்ததால், படகு மூழ்கி விபத்துக்குள்ளானதாக கடலோர மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 10 பேர் சிறுவர்கள், ஒரு முதிய பெண் மற்றும் ஒரு ஆண் என்று வங்கதேச எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். கடந்த ஆறு வாரங்களில் மட்டும் லட்சக்கணக்கான ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் வன்முறைக்கு பயந்து வங்கதேச நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com