மிரட்டிய அதிபயங்கர நிலநடுக்கம்! குலுங்கிய பிரம்மாண்ட கட்டிடங்கள்! 111 பேர் அதிர்ச்சி மரணம்!
கொலம்பியாவில் 115 கி.மீ ஆழத்தில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம், தலைநகர் போகோட்டா உட்பட பல பகுதிகளை கடுமையாக அதிரவைத்தது. தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில், 61 கட்டிடங்கள் சேதமடைந்து, இடிபாடுகளில் சிக்கி 111 பேர் உயிரிழந்துள்ளனர்; 87 பேர் படுகாயம். மீட்புப் பணிகளை அதிபர் நேரடியாக கண்காணித்து வருகிறார்.
பல பெரிய பாறைத் தட்டுகளாக பிரிந்து கிடக்கும் பூமியின் மேலோடு, மென்மையாக நகர்ந்துக் கொண்டே இருக்கும்போது, சில சமயங்களில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். இவ்வாறு மோதுவதால் அழுத்தம் உண்டாகி, பாறைகள் உடைந்து, அதன்மூலம் எழும் சக்தி, அலை அலைகளாக பரவி நிலத்தை அதிரச் செய்வதே, நிலநடுக்கம்.
இந்த நிலநடுக்கத்தை, ரிக்டர் என்ற அளவுகோல்களில் தான், ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துக்கின்றனர். 7.5-க்கு மேல் உள்ளவை மிக பயங்கரமானவை என்றும், 4-ல் இருந்து 7 வரை உள்ளவை நடுத்தரமானவை என்றும், 3-க்கு கீழ் உள்ளவை சிறிய நிலநடுக்கம் என்றும் கருதப்படுகிறது.
சமீபகாலமாக, ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளை தாக்கிய நிலநடுக்கம், தற்போது தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியா நாட்டிலும் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
115 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலடுக்கம், 7.4 ரிக்டர் அளவுகோல்களில் பதிவாகியிருப்பதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் சுனாமி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், தலைநகர் போகோட்டா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், இதனை தேசிய அவசரநிலை என்று, அந்நாட்டு அரசு பிரகடணப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி, இதுவரை 111 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 87 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், 61 கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும், அந்நாட்டின் புதிய அதிபர் அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா ( Abelardo de la Espriella ) தெரிவித்துள்ளார். மேலும், கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகளை தான் பார்வையிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொலம்பியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அன்டை நாடாக உள்ள ஈக்வடாரிலும் உணரப்பட்டிருப்பதை வைத்து பார்க்கும்போது, இது எவ்வளவு சக்திவாய்ந்தது என்று தெரிகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு சேதங்கள் முழுமையாக மதிப்பிடப்படும் வரை, கெலம்பியாவில் உள்ள பெரெய்ரா, மேனிசலெஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்படுவதாக, அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.

