
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவின் வூஹானில் முகக்கவசம் அணியாமல் பட்டமளிப்பு விழாவில் 11000 மானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வின் போது மாணவர்கள் சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் இருந்துள்ளனர். தற்போது அந்த நிகழ்வின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அங்குள்ள நார்மல் பல்கலைகழகத்தில் இந்த விழா நடந்துள்ளது. உலகமே முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தொடரை முறியடிக்க போராடி வரும் சூழலில் சீனாவின் நடந்துள்ள இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் நிலைக்கு திரும்பாமல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.