சீனாவில் நிலநடுக்கம் - 11 பேர் உயிரிழப்பு ; 122 பேர் படுகாயம்

சீனாவில் நிலநடுக்கம் - 11 பேர் உயிரிழப்பு ; 122 பேர் படுகாயம்

சீனாவில் நிலநடுக்கம் - 11 பேர் உயிரிழப்பு ; 122 பேர் படுகாயம்
Published on

சினாவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 122 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் இடைவெளியில் நேற்று இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டது. இது முக்கிய பிராந்திய நகரங்களான செங்டுவின் தலைநகரான செங்கு மற்றும் சோங்கிங்கின் பெருநகரங்களில் அதிர்வு ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.9 அளவும் அடுத்து வந்த நிலநடுக்கம் 5.2 அளவும் கொண்டது. இரண்டும் சேர்த்து 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் மற்றும் சேங்கிங் கவுண்டிக்கு அருகில் மையம் கொண்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் விரிசல் அடைந்தது. இதனால் மக்கள் வீதியை நோக்கி ஓடினர். ஆனாலும் சில இடங்களில் மக்கள் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 122 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2008 ஆம் ஆண்டு மே மாதம் சிச்சுவான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com