லாஸ் ஏஞ்சல்ஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ் முகநூல்

லாஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் காட்டுத்தீ... 16 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 16 ஆக உயர்ந்துள்ளது.
Published on

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 35 ஆயிரம் ஏக்கர் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளது. சுமார் 12 ஆயிரம் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் எரிந்து நாசமாகியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

காட்டுத் தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, மக்கள் வெளியேற்றப்பட்ட வீடுகளில் இருந்து கொள்ளையடித்ததற்காக, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 லாஸ் ஏஞ்சல்ஸ்
பத்திர கொள்முதலை தற்காலிகமாக நிறுத்திய சீனா... ஏன்? உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

கொள்ளையை தடுப்பதற்காக, மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com