
உலகில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சீனா நாட்டின் வுகான் நகரில், தற்போது முகக்கவசம் இல்லாமல் 11 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியின் வீடியோ வைரலாகி வருகிறது.
உலகமே கொரோனா தொற்று பீதியில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கத்தையும் அறிவித்து நடைமுறைப்படுத்திவரும் சூழல்நிலையில், சீனாவின் வுகான் நகரில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதை காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மத்திய சீனாவின் நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுகானில்தான் உலகின் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
தற்போது உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் சிக்கித்தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.