பெரு அகழாய்வில் 1,000 ஆண்டுகள் பழமையான உலோக ‌பட்டறை கண்டுபிடிப்பு

பெரு அகழாய்வில் 1,000 ஆண்டுகள் பழமையான உலோக ‌பட்டறை கண்டுபிடிப்பு

பெரு அகழாய்வில் 1,000 ஆண்டுகள் பழமையான உலோக ‌பட்டறை கண்டுபிடிப்பு
Published on

பெருவின் வடமே‌ற்கு பகுதியில் அக‌ழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறையினர் ஆயிரம் ஆண்டுகள் பழமையான உலோக பட்டறையை கண்டுபிடித்துள்ளனர்.

பெரு நாட்டின் லிமாவின் வடக்குப் பகுதியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் கடலோரத்தில் உள்ள லம்பாயேக்யூ என்ற‌ இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்த ஆய்வாளர்களுக்கு உலோக பட்டறை ஒன்று தென்பட்டது. ‌அதன் அருகே மத சடங்குகளுக்காக தங்களது உயிரை தியாகம் செய்தவர்களின் இரு சமாதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த சமாதியில் 25 முதல் 35 வயது மதிக்க‌த்தக்க 9 இளைஞர்களின் எலும்பு கூடுகளும், பீங்கான் பொருட்களும் ‌அகழ்ந்தெடுக்கப்ப‌ட்டிருப்பதாக அகழ்வாரா‌ய்ச்சியாள‌ர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உலோகப் பட்டறை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com