\
“ஆணுக்கு பெண் சரிசமம்” - நேபாளத்தில் கணவரை முதுகில் சுமந்து ஓட்டப்பந்தயம் ஓடிய பெண்கள்!

“ஆணுக்கு பெண் சரிசமம்” - நேபாளத்தில் கணவரை முதுகில் சுமந்து ஓட்டப்பந்தயம் ஓடிய பெண்கள்!

“ஆணுக்கு பெண் சரிசமம்” - நேபாளத்தில் கணவரை முதுகில் சுமந்து ஓட்டப்பந்தயம் ஓடிய பெண்கள்!
Published on

“ஆணுக்கு பெண் சரிசமம்” என்ற பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நேபாளத்தில் தங்களது கணவன்மார்களை முதுகில் ‘உப்பு மூட்டை’ தூக்கிக்கொண்டு ஓட்டப்பந்தயம் ஓடி அசத்தியுள்ளனர் பெண்கள். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது. 

உள்ளூர் சார்பில் நேபாளத்தில் தேவ்காட் கிராமத்தில் 100 மீட்டர் ஓட்டமாக நடைபெற்றது. வெவ்வேறு வயது பிரிவில் சுமார் 16 தம்பதியர் இந்த பந்தயத்தில் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

“மனதளவிலும், உடல் அளவிலும் ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணர்த்தவே இதை நடத்தியுள்ளோம்” என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விசித்திர போட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com