10 mps including a raja suspended on waqf board bill
ஆ.ராசாஏ.என்.ஐ.

வக்ஃப் வாரிய கூட்டுக்குழு | ஆ.ராசா உட்பட 10 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

வக்ஃப் வாரிய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்ட 10 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Published on
  • வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது,

  • வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது,

  • வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம்

உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது.

மேலும், மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதில், பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மக்களவையில் இருந்து 21 பேர், மாநிலங்களவையில் இருந்து 10 பேர் என பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெற்றனர். தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களும் நடைபெற்றன.

எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

இந்த நிலையில் வக்ஃப் வாரிய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்ட 10 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கூட்டுக்குழு கூட்டத்தில் வக்ஃப் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்ய தங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அமளி காரணமாக திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட 10 எம்பிக்கள் இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். கல்யாண் பானர்ஜி, முகமது ஜூவைத், அசாதுதீன் ஓவைசி, நாசிர் உசேன், மொஹிபுல்லா, எம்.அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதிமுல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த முழுத் தகவல்களை அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.

10 mps including a raja suspended on waqf board bill
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவராக பாஜக MP ஜகதாம்பிகா பால் நியமனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com