உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!

உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!

உக்ரைனில் வணிக வளாகம் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

கிழக்கு உக்ரைனில் மக்கள் அதிகம் கூடியிருந்த வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் திடீரென தாக்குதல் நடத்தின. ஏவுகணை தாக்குதலில் வணிக வளாகம் தீப்பற்றியது. வணிக வளாகத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு கூடியிருந்த நிலையில், 16 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஏவுகணைத் தாக்குதலால் வணிக வளாகம் தீயில் எரிந்து, அடர்ந்த, இருண்ட புகை வானத்தை நோக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. தீயணைப்பான்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்கவும் உதவி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் மருத்துவர்களுக்கு உதவுவதையும், முதலில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்குவதையும், காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றிச் செல்வதையும் வீடியோவில் காணலாம்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு ஜி-7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் காணொளி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் போரை குளிர்காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார். ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com