\
காட்டுத் தீயினால் 10,000 ஏக்கர் வனப்பகுதி நாசம்

காட்டுத் தீயினால் 10,000 ஏக்கர் வனப்பகுதி நாசம்

காட்டுத் தீயினால் 10,000 ஏக்கர் வனப்பகுதி நாசம்
Published on: 

அமெரிக்காவில் உள்ள ஒரேகானில் காட்டுத் தீ பற்றிப் பரவியதால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் ஒரேகான் மாகாணத்தில் காட்டுத் தீ வேகமாக பரவியதால் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதிகள் எரிந்து நாசமாயின. கடுமையான புகைமூட்டம்  காரணமாக பல்வேறு பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,‌ தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com