இங்கிலாந்து: பர்மிங்காமில் தொடர் கத்திக்குத்து சம்பவங்கள்.. ஒருவர் கொலை

இங்கிலாந்து: பர்மிங்காமில் தொடர் கத்திக்குத்து சம்பவங்கள்.. ஒருவர் கொலை

இங்கிலாந்து: பர்மிங்காமில் தொடர் கத்திக்குத்து சம்பவங்கள்.. ஒருவர் கொலை
Published on

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்த தொடர் கத்திக்குத்து சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் இரண்டாவது முக்கிய நகரமான பர்மிங்காமில் பல்வேறு இடங்களில் நடந்த கத்திகுத்து தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர் என்று வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமை கண்காணிப்பாளர் ஸ்டீவ் கிரஹாம் இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார், ஆனால் "இது பயங்கரவாதத்துடன் தொடர்புடையது இல்லை, இது ஒரு சீரற்ற தாக்குதல் என்று தோன்றுகிறது," என்றும் கூறினார்.

உணவகங்கள், இரவு விடுதிகள் மற்றும் மதுக்கடைகள் நிறைந்த ஒரு பிரபலமான இடமான ஆர்கேடியன் மையத்திலும் அதைச் சுற்றியும் அதிகாலை 12:30 மணியளவில் வன்முறை வெடித்தது. அதன்பின்னர் அங்கு பல கத்திகுத்து சம்பவங்கள் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 26 அன்று ஸ்காட்டிஷ் நகரமான கிளாஸ்கோவில் நடந்த கத்திக்குத்து வன்முறைகளுக்கு பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, அந்த நிகழ்வில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டில் லண்டனில் நடந்த  இரண்டு மிகப்பெரிய கத்திக்குத்து சம்பவங்களுக்கு பின்னர் பிரிட்டன் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. மார்ச் மாதத்தின் இறுதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கத்தி குற்றம் ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிரிட்டனின் மிகவும் இனரீதியாக வேறுபட்ட நகரங்களில் ஒன்றான பர்மிங்காமில் தற்போது அதிகளவில் கும்பல் வன்முறைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com