சீனப் பெருஞ்சுவர் எங்குள்ளது? - டிவி நிகழ்ச்சியில் தவித்த பெண்

சீனப் பெருஞ்சுவர் எங்குள்ளது? - டிவி நிகழ்ச்சியில் தவித்த பெண்
சீனப் பெருஞ்சுவர் எங்குள்ளது? - டிவி நிகழ்ச்சியில் தவித்த பெண்

சீனப் பெருஞ்சுவர் எங்குள்ளது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு டிவி பங்கேற்பாளர் 2 முறை லைஃப் லைன்களை பயன்படுத்தியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்தான்புல் நகரைச் சேர்ந்த 26 வயது பெண் சூ ஆய்ஹான் என்பவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய வினாடி வினா விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது சீன பெருஞ்சுவர் எங்குள்ளது? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. மேலும் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான் என கேள்விக்கு நான்கு விடைகள் தரப்பட்டு, சரியான விடையை தெரிவிக்கும்படி கூறப்பட்டது. விடைத்தெரியாமல் தடுமாறிய அந்தப் பெண், விடையை தெரிந்துகொள்ள பார்வையாளர்களின் உதவியை நாடியுள்ளார். 

பார்வையாளர்களில் 51% பேர் சீனா என பதிலளித்தனர். மற்றவர்கள் இந்தியா என கூறியுள்ளனர். இந்த இருவேறு பதில்கள் அந்தப் பெண்ணை மேலும் குழப்பியது. எனவே 2வது லைப்லைனை பயன்படுத்த விரும்பினார். இதையடுத்து தனது நண்பரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடையை கேட்டுள்ளார். அவர் சீனா என உறுதிபட கூறியதை அடுத்து, அந்த விடையை அந்தப் பெண் தேர்வு செய்தார். சீன பெருஞ்சுவர் எங்குள்ளது? என்ற எளிமையான கேள்விக்கு பதில் தெரியாமல் தவித்த அந்தப் பெண்ணை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com