"அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம்” பைடன், கமலா ஹாரிஸ்க்கு தாமதமாக வாழ்த்து சொன்ன சீனா

"அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம்” பைடன், கமலா ஹாரிஸ்க்கு தாமதமாக வாழ்த்து சொன்ன சீனா
"அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம்” பைடன், கமலா ஹாரிஸ்க்கு தாமதமாக வாழ்த்து சொன்ன சீனா

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றது உறுதியான ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று சீனா தனது மவுனத்தை முறித்துக் கொண்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சீனா வாழ்த்தியுள்ளது.

"அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம் ... பைடன் மற்றும் ஹாரிஸை நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. "அமெரிக்க சட்டம் மற்றும் நடைமுறையின் அடிப்படையில் அமெரிக்க தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்றும் வாங் கூறினார்.

அடுத்த மாதம் அமெரிக்க தேர்தல் ஆணையத்தால் வாக்குகள் உறுதி செய்யப்படுவதற்கு காத்திருப்பதாகக் கூறி, ரஷ்யா, பிரேசில் மற்றும் மெக்சிகோ தலைவர்கள் இதுவரை வாழ்த்து சொல்லாமல் அமைதிகாத்துள்ளனர். "தேர்தல்களின் உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் வரை காத்திருப்பது சரியானது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருந்தார். பைடன் மற்றும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸை வாழ்த்திய முதல் உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். "உங்கள் அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துக்கள்! ஜோபைடன்!  துணை அதிபராக, இந்தோ-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாகவும் விலைமதிப்பற்றதாகவும் இருந்தது. இந்தியா-அமெரிக்க உறவுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்றவதை எதிர்பார்க்கிறேன்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com