"உக்ரைனை உடனடியாக சேர்க்க முடியாது" - தடாலடியாக அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்

"உக்ரைனை உடனடியாக சேர்க்க முடியாது" - தடாலடியாக அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்
"உக்ரைனை உடனடியாக சேர்க்க முடியாது" - தடாலடியாக அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களை விரைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கள் நாட்டை சேர்த்துக் கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி விண்ணப்பித்திருந்தார்.

இந்தக் கோரிக்கை குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கூட்டம் பிரான்ஸில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், "உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது சேர்ப்பது விவேகமான முடிவு அல்ல" என்றார்.

இதேபோல, இந்தக் கூட்டத்தில் பேசிய மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களும், உடனடியாக உக்ரைனை தங்கள் கூட்டமைப்பில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com