உலகம்
இத்தனை கோடிகளா?” - அசர வைக்கும் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் சொத்துமதிப்பு!
இத்தனை கோடிகளா?” - அசர வைக்கும் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் சொத்துமதிப்பு!
மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தனிப்பட்ட முறையில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
மறைந்த பிரிட்டன் மகாராணிக்கு சொந்தமாக எவ்வளவு சொத்துகள் இருக்கின்றன என்பது இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் பிரிட்டன் அரச குடும்பத்தின் சொத்துகளை தோராயமாகக் கணக்கிட்டது.
அதில், அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு 7 லட்சத்து 9 ஆயிரத்து 73 கோடி ரூபாயாக இருக்கலாம் என மலைக்க வைக்கும் கணக்கு வெளியானது. தவிர இரண்டாம் எலிசபெத்துக்கு மட்டும் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கலாம் எனக் கூறப்பட்டது. முதலீடுகள், நகைகள், ரியல் எஸ்டேட் மற்றும் விலை உயர்ந்த ஓவியங்களும் அதில் அடங்கும்.