"மிதவாத இஸ்லாமிற்கு திரும்புவோம்" : சவுதி இளவரசர்

"மிதவாத இஸ்லாமிற்கு திரும்புவோம்" : சவுதி இளவரசர்

"மிதவாத இஸ்லாமிற்கு திரும்புவோம்" : சவுதி இளவரசர்
Published on

சவுதியில் எல்லா மதத்தினரையும் வரவேற்கும் வகையில் மிதவாத இஸ்லாமிற்கு திரும்புவோம் என்று இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார். 

ரியாத்தில் நேற்று எதிர்கால முதலீடுகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்ற இந்த  கூட்டத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 30 ஆண்டு கால வாழ்வை தீவிர இஸ்லாம் என்ற கொள்கையால் வீணடிக்க வேண்டாம் என்றும்  உலக நாடுகளுக்கு ஏற்ப அனைத்து மதத்தினரையும் அனுமதிக்கும் மிதமான இஸ்லாத்துக்கு மாறுவதில் தவறில்லை என்றும் கூறினார். முகமது பின்னின் இத்தகைய பேச்சு அரங்கத்தில் பலரின் பாராட்டுக்களை பெற்றது. 

இந்த ஆண்டில் இளவரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது பின் அதிகாரத்திற்கு வந்த பின்னர் பல்வேறு மாற்றங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சவுதியில் முதன்முறையாக பெண்கள் கார் ஓட்ட அடுத்த ஆண்டு முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை உலக நாடுகள் பலவும் வரவேற்றது. இந்நிலையில் சவுதி மன்னரின் மிதவாத இஸ்லாமை பற்றி பேச்சு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com