பசி என்றால் என்னவென்று தெரியுமா?.. ட்ரம்புக்கு கேள்வியெழுப்பிய சிரிய சிறுமி

பசி என்றால் என்னவென்று தெரியுமா?.. ட்ரம்புக்கு கேள்வியெழுப்பிய சிரிய சிறுமி
பசி என்றால் என்னவென்று தெரியுமா?.. ட்ரம்புக்கு கேள்வியெழுப்பிய சிரிய சிறுமி

பசி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ட்ரம்ப் என்று சிரியாவின் முகமாக சமூகவலைதளங்களில் அறியப்படும் பானா அலாபெத் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிரியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கத் தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். மேலும், அகதிகளையும் ஏற்கப்போவதில்லை என்றும் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில், சமூகவலைதளமான ட்விட்டர் மூலம் சிரியாவைச் சேர்ந்த பானா அலாபெத் ட்ரம்ப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பசி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?. ஒருநாள் பொழுதை உணவு மற்றும் குடிநீரின்றி கழித்ததுண்டா. சிரியாவில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் நிலைகுறித்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இன்னொரு பதிவில், அகதிகளை ஏற்க மறுக்கும் உங்கள் முடிவு மோசமானது. உங்கள் கருத்துப்படியே அதனை சரி என்று வைத்துக் கொண்டால், மற்ற நாடுகளில் அமைதி திரும்ப நடவடிக்கைகளை எடுங்கள் என்றும் சிறுமி அலாபெத் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com