\
12 சிறுவர்கள் சிக்கிய தாய்லாந்து குகை மீண்டும் திறப்பு!

12 சிறுவர்கள் சிக்கிய தாய்லாந்து குகை மீண்டும் திறப்பு!

12 சிறுவர்கள் சிக்கிய தாய்லாந்து குகை மீண்டும் திறப்பு!
Published on

தாய்லாந்தில் 12 சிறுவர்களும் கால்பந்து பயிற்சியாளரும் சிக்கிய தாம் லுவாங் நங் குகை, பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில், தாம் லுவாங் நங் (Tham Luang Nang) குகைக்குள் 12 சிறுவர்களும் அவரது கால்பந்து பயிற்சியாளரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பார்வையிட சென்றனர். அங்கு திடீரென மழை பெய்ததால் தண்ணீர் குகைக்குள் சென்றது. இதனால் அவர்கள் வெளிவர முடியாமல் சிக்கிக்கொண்டனர். 18 நாள் கடும் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் பத்திரமாக மீட்கப் பட்டனா்.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை அடுத்து அந்த குகை மூடப்பட்டது. இந்நிலையில், அந்த குகை கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 15 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட அந்தக் குகைக்கு ஒரே நாளில் ஏராளமான பயணிகள் வந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com