"அப்பா வீட்டிற்கு வந்துவிட்டார்": வீடு திரும்பிய உக்ரைன் ராணுவ வீரர் மகளின் கண்ணீர் வீடியோ

"அப்பா வீட்டிற்கு வந்துவிட்டார்": வீடு திரும்பிய உக்ரைன் ராணுவ வீரர் மகளின் கண்ணீர் வீடியோ

"அப்பா வீட்டிற்கு வந்துவிட்டார்": வீடு திரும்பிய உக்ரைன் ராணுவ வீரர் மகளின் கண்ணீர் வீடியோ
Published on

போரிலிருந்து வீடு திரும்பிய உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரை அவரது மகள் ஆனந்த கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போர் முடிந்து திரும்பிய வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணையும் தருணம் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை., உணர்ச்சிப் பூர்வமானவை. உக்ரைனின் உள்நாட்டு விவகார அமைச்சகத்தின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்செங்கோ, ரஷ்யப் படைகளுடன் போரிட்டு தனது குடும்பத்திற்குத் திரும்பிய உக்ரைன் வீரர் ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

"அப்பா வீட்டிற்கு வந்துவிட்டார்" என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் வீடு திரும்பிய உக்ரைன் ராணுவ வீரரை அவரது மகள் ஆனந்த கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்கும் உணர்ச்சிகரமான காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் பிப்ரவரி 24 அன்று துவங்கிய ராணுவ நடவடிக்கை தற்போது வரை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com