''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
Published on

இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

கொரோனாவால் பெரும் பாதிப்புக்கு உள்ளான அமெரிக்கா இந்திய அரசிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கேட்டது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை நீக்கக் கோரி இந்தியப் பிரதமரிடம் பேசினேன்.

மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதியளித்தால் அது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தேன். கேட்டுக்கொண்ட பின்பும், மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், பரவாயில்லை. ஆனால், எதிர்காலத்தில் பதிலடி இருக்கும். ஏன் பதிலடி கொடுக்கக்கூடாது ?'' என்று மிரட்டல் கொடுக்கும் விதத்தில் பேசினார்.

அமெரிக்க அதிபரின் இந்த மிரட்டல் பேச்சு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே அமெரிக்கா கேட்டதால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்தது இந்தியா. இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில்,

அசாதாரண நேரங்களில் தான் நண்பர்களிடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. HCQ குறித்த முடிவுக்கு இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை மறக்க மாட்டேன். இந்த போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், மனிதகுலத்திற்கே உதவும் வலுவான தலைமையான பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com