மாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய ஹீரோ: பாரிஸில் ஒரு ஸ்பைடர்மேன் - வைரல் வீடியோ!

மாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய ஹீரோ: பாரிஸில் ஒரு ஸ்பைடர்மேன் - வைரல் வீடியோ!

மாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய ஹீரோ: பாரிஸில் ஒரு ஸ்பைடர்மேன் - வைரல் வீடியோ!
Published on

பாரில் நகரில் மாடியில் தொங்கிக்கொண்டிருந்த 4 வயது குழந்தையை ஸ்பைடர்மேன் போல காப்பாற்றியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மாலி தீவைச் சேர்ந்த இளைஞர் மம்மோடோ கஸாமா (22). கடந்த சில மாதங்களுக்கு முன் வேலைக்காக பாரிஸுக்கு வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை வடக்கு பாரிஸ் நகரில் உள்ள தனது அறைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு அபார்ட்மென்ட் முன்பு ஏராளமானக் கூட்டம் நின்றது. அதைக் கண்டதும் என்னவென்று விசாரித்தார் மம்மோடோ. அப்போது நான்காவது மாடியில் குழந்தை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. இதைக் கணடு துடித்த அவர், அடுத்த நொடியே செயலில் இறங்கினார். நேராக பில்டிங்குக்குச் சென்றார். ஒவ்வொரு பால்கனியாக ஒற்றைக் கையால் ஏறி, தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை அலேக்காகத் தூக்கிக் காப்பாற்றினார்.

இதைக் கண்ட அனைவரும் அவரைப் பாராட்டித் தள்ளிவிட்டனர். பாரிஸின் ஸ்பைடர்மேன் என்று பட்டமும் கொடுத்துவிட்டனர். அவர் அபார்ட்மென்டில் ஏறுவதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ, அவரை தனது அலுவலகத்துக்கு இன்று அழைத்து பாராட்டி, ‘உங்கள் செயல் பாரிஸில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உதாரணமாக அமையும்’ என்று கூறியுள்ளார். பிரெஞ்ச் குடியரசு தலைவர் இம்மானுவேல் மேக்ரானும் தனது பங்களாவுக்கு அழைத்து அந்த இளைஞரைப் பாராட்டியுள்ளார். 

’நான் பார்த்தபோது கூட்டமாக சிலர் கத்திக்கொண்டிருந்தனர். அப்போதுதான் குழந்தை தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அதைக் கண்டதுமே உடனடியாக மாடியில் ஏறி குழந்தையைக் காப்பாற்றி விட்டேன். கடவுளுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார் மம்மோடோ கஸாமா.

அந்தக் குழந்தைக்கு 4 வயது என்றும் வீட்டில் பெற்றோர் இல்லாததால் விளையாடியபடி பால்கனிக்கு வந்துவிட்டதும் தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com