மசூத் அசார் விவகாரம் விரைவில் தீர்வு காணப்படும் - சீனா தூதர்

மசூத் அசார் விவகாரம் விரைவில் தீர்வு காணப்படும் - சீனா தூதர்
மசூத் அசார் விவகாரம் விரைவில் தீர்வு காணப்படும் - சீனா தூதர்

மசூத் அசார் விவகாரம் கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்று இந்தியாவிற்கான சீனா தூதர் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது. மேலும் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கக்கோரி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்‌ட நாடுகள் கடந்த மாதம் 27ஆம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. 

இதனையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும், சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில், தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவின் நடவடிக்கைக்கு 4ஆவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டது. இதன் மூலம் சீனா இந்தியாவின் முயற்சிக்கு நான்காவது முறையாக தடை விதித்தது. இதற்கு பல உலக நாடுகளும் சீனாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தியாவிற்கான சீனா தூதர் லுவோ மசூத் அசார் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“ஐநாவில் மசூத் அசார் தொடர்பான விவகாரத்திற்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். இது தொடர்பாக ஐநாவில் சீனா இட்டுள்ள தடை ஆலோசனைக்கு உட்பட்டதேயாகும். இதனால் உலக நாடுகள் ஆலோசனைக்கு பிறகு இந்தத் தடை விரைவில் அகற்றப்படும். அத்துடன் மசூத் அசார் விவகாரம் முடிவுக்கு வரும். மேலும் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவு நல்ல பாதையில்தான் சென்றுகொண்டுள்ளது”எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com