வீட்டு வேலைகளை அதிகம் செய்வது ஆண்களா பெண்களா? சர்வே சொல்வதென்ன?

இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளில் ஏழு மணி நேரம் செலவழிப்பதாகவும், ஆண்கள் மூணரை மணி நேரம் மட்டுமே செலவழிப்பதாகவும் புதிய தரவு வெளியாகி உள்ளது.

பெண்கள் வீட்டு வேலைகள் அதிகம் செய்கிறார்களா அல்லது ஆண்கள் வீட்டு வேலைகள் அதிகம் செய்கிறார்களா என்று ஒரு சர்வே எடுக்கப்பட்டது.

அதில் ‘சமையல், வீட்டை சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகளை அதிகமாக பெண்கள் தான் செய்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் பெண்களின் கல்வி விகிதம் அதிகரித்து இருந்தாலும், தொழில் மற்றும் வேலை சூழல்களில் பெண்களின் பங்களிப்பு குறைந்தே வருகிறது’ என கூறப்பட்டுள்ளது.

பெண்
பெண்

இதிலும் அலுவலக வேலைக்குச்செல்லாத பெண்கள் வீடுகளில் ஏழு மணிநேரம் வீட்டு வேலை செய்வதாகவும், வேலைக்கு செல்லும் பெண்கள் வீடுகளில் ஐந்தேமுக்கால் மணிநேரம் வேலை செய்து வருவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் ஆண்கள் வெறும் மூன்றரை மணிநேரம் மட்டுமே வீட்டு வேலைகள் செய்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com