\
சென்னை: இருசக்கர வாகனத்தில் கூவம் ஆற்றைக் கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு

சென்னை: இருசக்கர வாகனத்தில் கூவம் ஆற்றைக் கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு

சென்னை: இருசக்கர வாகனத்தில் கூவம் ஆற்றைக் கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு
Published on

சென்னை அருகே மோட்டார் சைக்கிளில் கூவம் ஆற்றைக் கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

மதுரவாயல் - ஓம் சக்தி நகர் கூவம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் ஓடுவதால், ஆற்றைக் கடக்கக் கூடாதென தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நெற்குன்றத்தைச் சேர்ந்த கவுதம் - அரிந்தர் ஆகிய நண்பர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் ஆற்றைக் கடக்க முற்பட்டுள்ளனர்.

நீரின் வேகத்தில் இருசக்கர வாகனம் தடுமாறியதில் இருவரும் நீரில் விழுந்துள்ளனர். இவர்களில் அரிந்தர் தப்பிவிட, கவுதமை தண்ணீர் அடித்துச் சென்றது. தகவலின்பேரில் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட கவுதமின் உடலை மீட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com