ஆத்தூர் இளைஞரை கரம்பிடித்த ஆப்பிரிக்க இளம்பெண் - தமிழ் பாரம்பரிய முறைப்படி விமர்சையாக நடந்த திருமணம்

ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம்
தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம்PT Tesk

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமம் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் விவசாயி செல்லதுரை. இவரது மனைவி சின்னபொண்ணு. இந்த தம்பதியின் மகனான குட்டி மார்க்ஸ் என்பவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஆப்ரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டின் அர்பா மினாச் அரசு பல்கலைகழகத்தில் இணை பேராசியராகவும் SSJCET ஆராய்ச்சியாளராகவும் பணி பிரிந்து வந்துள்ளார். அப்போது அதே பல்கலை கழகத்தில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வந்த மென்பரே அக்லிலு என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர் எத்தியோப்பியா நாட்டின் அடமா நகரரைச் சேர்ந்த அக்லிலுகிஸான் என்பவரின் மகள் ஆவார்.

பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, தமிழர் பாரம்பரிய முறைப்படி ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் புடவை அணிந்தபடி தாலிக்கட்டி கொண்டு மாலை மாற்றி தமிழக மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு கரம்பிடித்தார். இச்சம்பவம் வந்திருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், எத்தியோப்பியாவைச் சேர்ந்த மணப்பெண்ணின் வீட்டாருக்கு விசா கிடைக்காததால் அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில் மதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மணமகனின் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com