
கருகலைப்பு செய்ய சொல்லி மிரட்டுவதாக டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் மீது இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் மோனிஷா(31). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் சதீஷ். இவர் டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரராக உள்ளார். மோனிஷா ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இருவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகி வந்த நிலையில் 2018ம் ஆண்டு ராஜகோபால் சதீஷ் மோனிஷாவை காதலிப்பதாக கூறியதன் பேரில், இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் 2019ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ராஜகோபாலின் சொந்த ஊரான திருச்சிக்கு சென்றிருந்த நிலையில் அங்கு ராஜகோபாலுக்கு திருமணம் ஆகியிருந்தது தெரியவந்தது.
இதனால் ராஜகோபாலுடனான தொடர்பை துண்டித்து விட்டு, 2022ம் ஆண்டு மோனிஷா பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக மூன்று மாதங்களில் புரிந்து விட்டனர். இடையில் இருவரும் பேசி பழகி வந்ததாகவும் அதனால் தான் கர்ப்பமாகிவிட்டதாகவும் தற்போது அதனை கலைக்கச் சொல்லி ராஜகோபால் மிரட்டுவதாகவும் மோனிஷா புகார் அளித்துள்ளார்.
அடையார் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகாரில், “2022ம் ஆண்டு செல்போனில் தொடர்பு கொண்ட ராஜகோபால் நண்பர்களாக பேச வேண்டும் என்று கூறினார். அதன் பேரில் நண்பர்களாக பழகி வந்தோம். கடந்த ஏப்ரல் மாதம் நண்பர்களோடு கொடைக்கானல் சென்று ஒன்றாக இருந்ததால் தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்.
இந்நிலையில், ராஜகோபால் சதீஷ் தூண்டிதலின் பேரில் அவரது மனைவி சாம்பவி, அவரது தோழி சுரேகா ஆகியோர் கருக் கலைப்பு செய்யச் சொல்லி மிரட்டுகிறார்கள். அவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” தெரிவித்துள்ளார். அந்தப் புகார், தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.