உலக தேங்காய் தினம் - தேங்காயோடு தமிழ்நாட்டுக்கு உள்ள தொடர்பு என்ன?

உலக தேங்காய் தினம் - தேங்காயோடு தமிழ்நாட்டுக்கு உள்ள தொடர்பு என்ன?
உலக தேங்காய் தினம் - தேங்காயோடு தமிழ்நாட்டுக்கு உள்ள தொடர்பு என்ன?

உலகமே தேங்காய் தினத்தை கொண்டாடி வரும் வேளையில், தேங்காயோடு தமிழ்நாட்டுக்கு உள்ள தொடர்பை காண்போம்.

நாட்டிலேயே பொள்ளாச்சியில் தான் 40 சதவீதம் தேங்காய் உற்பத்தி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காயில் இருந்து மட்டும் எண்ணெய், சோப், தேங்காய் சிரட்டையால் ஆன ஐஸ்கிரீம் கப்புகள் என பலவிதமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொள்ளாச்சியில் இருந்து உற்பத்தியாகும் தேங்காய் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் 20 மாநிலங்களுக்கும் உலகளவில் சுமார் 125 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மனித உடலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இரும்பு சத்து, சோடியம், பொட்டாசியம், ஸிங்க் போன்ற 18 வகையான தாது உப்பு வகைகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் ஆறாத புண்ணையும் ஆற்றக்கூடிய திறன் படைத்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள். எந்த வகையான தாவரத்தின் இலையையும் மீண்டும் வேர்பிடிக்க வைக்கும் ஆற்றல் இளநீரில் இருப்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com