தயார் நிலையில் இருக்கும் விநாயகர் சிலைகளை விற்க முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு

தயார் நிலையில் இருக்கும் விநாயகர் சிலைகளை விற்க முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு

தயார் நிலையில் இருக்கும் விநாயகர் சிலைகளை விற்க முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு
Published on

விநாயகர் சதுர்த்தி பண்டிகையொட்டி பொது இடங்களில் சிலை நிறுவவும், ஊர்வலம் செல்லவும் அரசு தடை விதித்துள்ளதால், களிமண்ணால் சிலை செய்யும் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வருகின்ற 10ஆம் தேதி நடைபெற இருந்த விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசு கடந்த ஆண்டைப் போல், இந்த ஆண்டும் அனுமதி மறுத்துள்ளதால் கடந்த ஓராண்டாக களிமண் விநாயகர் சிலைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் துவரடிமனை, மழையூர் உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த ஆண்டு அதிக அளவிலான விநாயகர் சிலை செய்திருந்த நிலையில் அரசின் அனுமதி மறுப்பையடுத்து அதனை விற்பனை செய்ய முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வருவதால் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 3 ஆண்டுகளாக கடன்வாங்கி செய்து வைத்திருக்கும் விநாயகர் சிலைகளை விற்றுவிடலாம் என மண்பாண்ட தொழிலாளர்கள் நம்பி இருந்த வேளையில், இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதயடுத்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் புதுக்கோட்டை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

அரசு எடுக்கும் முடிவிற்கு கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் தாங்கள் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாகவும், அதே வேளையில் இன்றைய நாகரீக உலகில் பலர் இத்தொழிலை விட்டு விட்டு மாற்று தொழிலுக்கு சென்றுள்ள நிலையில், பாரம்பரிய தொழிலான மண்பாண்ட தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com