மகாராஷ்ட்டிரா: தாக்க வந்த சிறுத்தையை தடியால் அடித்து விரட்டிய மூதாட்டி

மகாராஷ்ட்டிரா: தாக்க வந்த சிறுத்தையை தடியால் அடித்து விரட்டிய மூதாட்டி

மகாராஷ்ட்டிரா: தாக்க வந்த சிறுத்தையை தடியால் அடித்து விரட்டிய மூதாட்டி
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் மூதாட்டியொருவர் தன்னை தாக்க முயன்ற சிறுத்தையை தனது ஊன்றுகோலால் அடித்து விரட்டிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோரேகான் (Goregaon) பகுதியில் மூதாட்டி ஒருவர் தனது வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னே மறைந்திருந்த சிறுத்தை திடீரென மூதாட்டியை தாக்கி கடிக்க முற்பட்டுள்ளது. சிறுத்தையின் திடீர் தாக்குதலால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி, தனது ஊன்றுகோலை பயன்படுத்தி சிறுத்தையை அடித்து விரட்ட முற்படுகிறார். ஊன்றுகோலால் மூதாட்டி சிறுத்தையை தொடர்ந்து அடித்ததை கண்டு பயந்த சிறுத்தை அப்பகுதியை விட்டு வெளியேறுகிறது.

அதன் பின் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் வெளியே வந்து எட்டிப் பார்க்கின்றனர். அதற்குள் அந்த சிறுத்தை தப்பித்துவிட்டது. மூதாட்டியின் துரிதமான நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com