வாக்குறுதியில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா?- ஆர்.பி.உதயகுமார்

வாக்குறுதியில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா?- ஆர்.பி.உதயகுமார்
வாக்குறுதியில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா?- ஆர்.பி.உதயகுமார்

கொடுத்த வாக்குறுதியை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா அல்லது  கொடுத்த வாக்குறுதி இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கல்லுப்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அம்மா கோவிலில் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.பி.உதயகுமார், “கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை ஜெயலலிதா அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது முதல் அலை ஏற்பட்ட போது தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, அதன் மூலம் பாரதப் பிரதமரின் பாராட்டை எடப்பாடியார் பெற்றார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் மின் தட்டுப்பாட்டால் இருளில் மூழ்கியிருந்தது. அதனை தொடர்ந்து தமிழகம் மின் மிகை மாநிலமாக மாற்றப்பட்டது. கடந்த திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று சொன்னார்கள், அதுபற்றி கேட்டால் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள்.

வெள்ளை அறிக்கை எதற்கு, உங்களுக்குத்தான் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறதே, சட்டசபையில் நீங்கள் விவாதத்திற்கு வைக்கலாமே. நிதிநிலை அறிக்கையில் துறைக்கான நிதி நிலை எவ்வளவு? அதனால் இழப்பு எவ்வளவு? என்பது பற்றி சட்டமன்றத்தில் நீங்கள் விவாதத்திற்கு வைத்தால் எல்லோரும்  விவாதிக்க தயாராக இருக்கிறார்கள்.

நீங்கள் கொடுத்த வாக்குறுதியை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா அல்லது நீங்கள் கொடுத்த வாக்குறுதி இருந்து தப்பித்துக்கொள்ள முற்றுப்புள்ளியா என்பதை இன்றைக்கு மக்கள் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்2011ல் இருந்து இன்றைக்கு வரை வெள்ளை அறிக்கையாக விடுவோம் என்று சொல்லி மக்களை திசை திருப்பி இன்றைக்கு அதிமுக மீது களங்கத்தை பழியை சுமத்த நினைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருப்பது, நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான். திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதியில் தாய்மார்களுக்காக மாதம்தோறும் 1000  மாதந்தோறும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் தாய்மார்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

எங்கள் அரசு இன்றைக்கு அமைந்திருந்தால் எடப்பாடியாரும், ஓபிஎஸ்சும் சாக்கு போக்கு சொல்லி தப்பித் இருக்க மாட்டார்கள். வாக்குறுதியை நிறைவேற்ற  அவர்கள் ஆணையிட்டு இருப்பார்கள். அதே  போல் பெண்களுக்கு இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்து இருந்தால் ஒவ்வொரு இல்லத்தின் வாசல் முன்பு வாஷிங் மெஷின் இருந்து இருக்கும். இதுபோல காரணங்கள் சொல்லி காலம்  தாழ்த்த  மாட்டார்கள் அதுதான் அதிமுக அரசிற்கும், திமுக அரசுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com