களைகட்டும் விண்வெளி சுற்றுலாத் தொழில்: வானில் பறக்க போட்டிபோடும் நிறுவனங்கள்

களைகட்டும் விண்வெளி சுற்றுலாத் தொழில்: வானில் பறக்க போட்டிபோடும் நிறுவனங்கள்

களைகட்டும் விண்வெளி சுற்றுலாத் தொழில்: வானில் பறக்க போட்டிபோடும் நிறுவனங்கள்
Published on

விண்வெளி சுற்றுலாத் தொழில் உலகளவில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக விண்வெளி சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வரும் பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், தனது நிறுவனத்தின் விண்கலன் மூலம் நாளை விண்வெளிக்கு புறப்பட உள்ளார்.

பறப்பது என்றாலே பரவச அனுபவம்தான்அதுவும் பூமியின் புவி ஈர்ப்பு எல்லையை கடந்து மேலே மேலே செல்வது விவரிக்க இயலாத மகிழ்ச்சியை வழங்கும். அந்த பரவச அனுபவத்தை வழங்குவதற்காக விண்வெளி சுற்றுலாத் தொழிலில் சில நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.

பிரபல விமான தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனும் விர்ஜின் கேலக்டிக் என்ற பெயரில் விண்வெளி சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு பயணிகளை அனுப்பியுள்ள நிலையில் இம்முறை அதன் உரிமையாளரான பிரான்சனே விண்வெளிக்கு பறந்து செல்ல உள்ளார்.

விஎம்எஸ் ஈவ் என்ற பெயர் கொண்ட இந்த விண்கலனில் பிரான்சன் தவிர மேலும் 5 பேரும் பயணிக்க உள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ பாலைவனப்பகுதியில் இருந்து இந்த ராக்கெட் புறப்பட உள்ளது. திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் 90 நிமிடங்களுக்குள் விண்கலம் விண்வெளியை அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு முதல் ஆண்டுக்கு 400 விண்வெளி பயணங்களை நடத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஹாலிவுட் பிரபலங்கள், பெரும் தொழிலதிபர்கள் என சுமார் 600 பேர் முன்பதிவு செய்து காத்துள்ளனர். இப்பயணத்திற்கு சுமார் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையில் விண்வெளி சுற்றுலாத் தொழிலில் அமேசான் நிறுவனரும் உலகின் பெரும்பணக்காரருமான ஜெஃப் பெசோசும் தீவிரம் காட்டி வருகிறார். இவர் வரும் 20-ஆம் தேதி விண்வெளிக்கு பறக்க உள்ளார். ஜெஃப் பெசோஸ், ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி பயண நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

எலான் மஸ்க் நடத்தி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் வரும் செப்டம்பரில் தனது விண்கலனை செலுத்த உள்ளது. சுற்றுலா என்றால் ஊட்டி, கொடைக்கானல், கோவா, குலு மணாலி, சுவிட்சர்லாந்து என்பது போன்ற பிரபல சுற்றலாத்தலங்கள் பட்டியலில் விண்வெளியும் இணையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே கூறலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com