மக்கள் அதிகம் வசிக்காத இடங்களில் அணுக்கழிவுகளை சேமிக்கவேண்டும்: சபாநாயகர் அப்பாவு

மக்கள் அதிகம் வசிக்காத இடங்களில் அணுக்கழிவுகளை சேமிக்கவேண்டும்: சபாநாயகர் அப்பாவு
மக்கள் அதிகம் வசிக்காத இடங்களில் அணுக்கழிவுகளை சேமிக்கவேண்டும்: சபாநாயகர் அப்பாவு

மக்கள் அதிகம் வசிக்காத இடங்களில் அணுக் கழிவுகளை சேமிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அணுமின் நிலையத்திலேயே அணுக் கழிவுகளை சேமிக்கும் முடிவை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 6 அணு உலைகள் அமைக்க இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு, முதல் இரு அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3-வது மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கூடங்குளத்திலேயே 3ஆவது, 4ஆவது அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. முதல் மற்றும் 2-வது அணு உலைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை எங்கு சேமித்து வைப்பது என்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த முடிவுக்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அமைந்துள்ள ராதாபுரம் தொகுதியின் உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு, இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com