\
திரைப்படப் பாடலை பாடி கமல்ஹாசனை வரவேற்ற தொண்டர்!

திரைப்படப் பாடலை பாடி கமல்ஹாசனை வரவேற்ற தொண்டர்!

திரைப்படப் பாடலை பாடி கமல்ஹாசனை வரவேற்ற தொண்டர்!
Published on
வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் தலைவர்கள், வேட்பாளர்கள் அவ்வப்போது தேநீர் கடைகளில் டீ குடிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனோ ஹோட்டலுக்கு சென்று காபி குடித்தார். 
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், கடந்த 5 நாட்களாக அந்த மாவட்டத்திலேயே முகாமிட்டுள்ளார். தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதோடு, நாள்தோறும் காலையில் நடைப்பயிற்சியின்போதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 
காந்திபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் காபி குடிக்க சென்ற கமல்ஹாசன், அங்கிருந்தவர்களுடன் உரையாடினார். அவர் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது அவரது ஆதரவாளர் ஒருவர் தேவர் மகன் பட பாடலை பாடி கமல்ஹாசனை வாழ்த்தினார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com