\
'அமமுக ஆட்சிக்கு வந்ததும் விராலிமலை ரகசியம் வெளியேவரும்' - டிடிவி தினகரன்

'அமமுக ஆட்சிக்கு வந்ததும் விராலிமலை ரகசியம் வெளியேவரும்' - டிடிவி தினகரன்

'அமமுக ஆட்சிக்கு வந்ததும் விராலிமலை ரகசியம் வெளியேவரும்' - டிடிவி தினகரன்
Published on

அமமுக ஆட்சிக்கு வந்ததும் விராலிமலை ரகசியம் வெளியே வரும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் கந்தர்வகோட்டையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஆட்சியில் அமர விடக்கூடாது என மக்களிடம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பணத்தில் பாதியளவு, விராலிமலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், அமமுக ஆட்சிக்கு வந்ததும் அவை மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com